சென்னை, ‘ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு, இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும்’ என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில், ஆசிரியர் பணி காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக போட்டி தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பட்டதாரிகள், ஆசிரியர் தகுதிக்கான, ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்தாண்டு, அக்., 6 மற்றும், 7ல், டெட் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது; ஆனால், நடக்கவில்லை. இந்நிலையில், ‘இந்த மாத இறுதிக்குள், டெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க, 15 நாட்கள் அவகாசம் தரப்படும்’ என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இந்த தகவலை, அவர், தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்