அரக்கோணம் – ஜோலார்பேட்டை-திருப்பத்தூர் பிரிவில், தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, ரயில் சேவையில் திங்கள், புதன்கிழமை (அக்.22, 24) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை மாற்றம் செய்யப்படும் ரயில்கள்: சென்னை சென்ட்ரல் -மங்களூருக்கு திங்கள்கிழமை நண்பகல் 12.05 மணிக்கு புறப்படும் மேற்கு கடற்கரை விரைவு ரயில் ஜோலார்பேட்டையில் 2 மணி நேரம் நின்று செல்லும். மும்பை சிஎஸ்டி – நாகர்கோவிலுக்கு செல்லும் விரைவு ரயில் சோமநாயக்கன்பட்டியில் 3 மணி நேரம் நின்று செல்லும். ஜோலார்பேட்டை-ஈரோடுக்கு பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட வேண்டிய பயணிகள் ரயில் நேரம் மாற்றப்பட்டு, மாலை 5.30 மணிக்கு இயக்கப்படும்.
புதன்கிழமை மாற்றப்படும் ரயில்கள்: சென்னை சென்ட்ரல் -மங்களூருக்கு புதன்கிழமை நண்பகல் 12.05 மணிக்கு புறப்படும் மேற்கு கடற்கரை விரைவு ரயில் ஜோலார்பேட்டையில் 2 மணி நேரம் நின்று செல்லும். கே.எஸ்.ஆர். பெங்களூரு – கோவைக்கு பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் உதய் விரைவு ரயில் சோமநாயக்கன்பட்டியில் 30 நிமிஷம் நின்று செல்லும். ஜோலார்பேட்டை-ஈரோடுக்கு பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட வேண்டிய பயணிகள் ரயில் நேரம் மாற்றப்பட்டு, மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.