தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. வருடா வருடம் தீபாவளிக்கு அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்து வருகிறது.அதேபோல் இந்த ஆண்டிற்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு மொத்தம் 20% போனஸ் வழங்கப்படும் .அதில் 8.33 % போனஸ் மற்றும் 11.67 % கருணைத்தொகை வழங்கப்படும். .
அதேபோல் நட்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு மொத்தம் 10% போனஸ் வழங்கப்படும்.அதில் போனஸ் 8.33 % மற்றும் 1.67 % கருணைத்தொகை வழங்கப்படும்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்து அரசு அறிவித்துள்ளது. அதன்படி 3 லட்சத்து 58 ஆயிரம் 330 ஊழியர்களுக்கு ரூ 486.96 கோடி போனஸ் கிடைக்கும். குறைந்த பட்சமாக ரூ.8,400ம் அதிகபட்சமாக ரூ.16,800 போனஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.