வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் மானியம் அல்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.1.69 உயர்த்தப்பட்டுள்ளது.
வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் (14.2 கிலோ) விநியோகஸ்தர்களின் கமிஷன் தொகை ஒரு எரிவாயு உருளைக்கு ரூ.48.49-லிருந்து ரூ.50.58-ஆக அண்மையில் உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நுகர்வோருக்கான மானியம் அல்லாத வீட்டு சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.958.50-லிருந்து ரூ.960.19-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.494.39-லிருந்து 496.08-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.464.11 செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் (5 கிலோ) உருளைக்கான விநியோகஸ்தர்களின் கமிஷன் தொகையும் ஒரு எரிவாயு உருளைக்கு ரூ.24.20-லிருந்து ரூ.25.29-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.