மதுரை-ராமேசுவரம் பயணிகள் ரயிலின் வழித்தடத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி: மானாமதுரை-ராமேசுவரம் இடையே நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வழியே இயக்கப்படும் சில ரயில்களின் வழித்தடத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி நவ.14, 15, 16 ஆகிய தேதிகளில் மதுரை-ராமேசுவரம் பயணிகள் ரயில்(எண்.56723) ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரயில்(எண்.56722) நவ.14, 15, 16 ஆகிய தேதிகளில் ராமேசுவரத்துக்குப் பதிலாக ராமநாதபுரத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *