டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் 2020 ஆம் ஆண்டிற்கான ஜனவரி பருவத்தில் சேருவதற்கு ஜூன் மாதம் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள பள்ளி மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள்: 31.03.2019, மாலை 05.45 மணி
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 01, 2019 மற்றும் ஜூன் 02, 2019
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 04.10.2019
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.01.2020 அன்று 11 வயது 6 மாதங்கள் நிரம்பியவராகவும், 13 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.
தேர்வுக்கட்டண விவரம்:
பொதுப் பிரிவினர் – ரூ.600
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் – ரூ.555
தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை: உத்ரகாண்ட், டேராடூன், டெல்பவன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் (வங்கி குறியீடு – 01576) என்ற முகவரிக்கு தேர்வுக்கட்டணத்தை கேட்புக் காசோலையாக (DD) அனுப்ப வேண்டும்.
கல்வித்தகுதி: 01.01.2020 -இல் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தேர்வுக்கான விண்ணப்பப்படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை கீழ்கண்ட முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பித்து, அதனுடன் கேட்புக் காசோலையை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பத்தை பெற அனுப்ப வேண்டிய முகவரி:
கமாண்டன்ட்,
இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி,
டேராடூன்,
உத்ரகாண்ட் – 248003.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:
தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை,
பூங்கா நகர்,
சென்னை – 600003.
மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, http://www.tnpsc.gov.in/Notifications/2019_11_RIMC_Jan_2020_term.pdf – என்ற இணையத்தில் பார்க்கலாம். மேலும், மற்ற விவரங்களுக்கு இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் இணையதளத்தை அதாவது http://www.rimc.gov.in/ -இல் பார்க்கவும்.