கார்த்தி, லட்சுமி மேனன் நடித்துள்ள ‘கொம்பன்’ படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 2ஆம் தேதி என உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த படத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த “U” சர்டிபிகேட் தற்போது ‘UA’ என மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

பிரபல அரசியல் கட்சி தலைவர் ஒருவர் கொம்பன்’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இந்த படம் மீண்டும் தணிக்கை செய்யப்பட்டு படத்தின் தணிக்கை சான்றிதழ் மாற்றியமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கொம்பன் படத்திற்கு ‘UA’ சான்றிதழ் கிடைத்துள்ளதால் படத்திற்கு தமிழக அரசின் வரிச்சலுகை கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை என்றும் ஏப்ரல் 2ஆம் தேதி திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்றும் படக்குழுவினர்கள் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.

கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண், தம்பி ராமையா, கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ‘குட்டிப்புலி’ இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

English Summary : Karthi ‘s komban ‘ film ‘ UA ‘ certificate