சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் சொத்து வரியை செலுத்த இன்றே கடைசி தினம் என்றும், அதனால் இதுவரை சொத்து வரி கட்டாதவர்கள் இன்று மாலைக்குள் சொத்து வரியை செலுத்துமாறும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சென்னையில் இந்த நிதியாண்டை போல இதற்கு முன் ரூ.500 கோடிக்கு மேல் வரி வசூல் செய்த வரலாறு இல்லை. இந்த ஆண்டு மாநகராட்சி அதிகாரிகள் எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் இந்த அளவுக்கு வரி வசூலாகியுள்ளது என்று கூறிய அவர், ஜப்தி உள்ளிட்ட மேல் நடவடிக்கைகளை தவிர்க்க இதுவரை வரி செலுத்தாமல் உள்ளவர்கள் இன்று மாலைக்குள் வரியை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை மக்கள் தங்களுடைய சொத்து வரியை இணையதளத்திலும், மாநகராட்சி அலுவலகங்களிலும்செலுத்தலாம் என்றும் ஒருசில வங்கிகளில் நேரடியாக சென்றும் வரி செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு குடிநீர் வரியை செலுத்தும் காலக்கெடுவும் இன்றுடன் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Today is the last day to pay property tax in Chennai