சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில் விதிமுறைகளுக்கு புறம்பாக, அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த மூன்று பார்வையாளர்கள் மாடங்களை இடிக்க சுப்ரீம் கோர்ட் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணையில் மூன்று பார்வையாளர் மாடங்களை இடிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தயார் என்று ஏற்கனவே கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் போட்டிகளை விட பொதுமக்களின் பாதுகாப்பே முக்கியம் என்று கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், 3 மாடங்களில் 2 மாடங்களைப் பயன்படுத்த கிரிக்கெட் சங்கம் கேட்டிருந்த அனுமதியை நிராகரித்தது மட்டுமின்றி அவற்றை இடிப்பது தொடர்பான திட்டத்தை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைத்துவிட்டு அதனை இடிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் இடிக்கப்படவுள்ள மூன்று பார்வையாளர்கள் மாடங்களும் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டிருந்ததால் அவற்றுக்கு நிவாரணம் வழங்க முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

English Summary : The Supreme Court ordered to demolish the 3 storeys at MA Chidambaram Stadium, Chennai.