சென்னை சென்ட்ரலில் இருந்து ஹவுரா வரை ஏ.சி பெட்டிகள் கொண்ட சிறப்பு விரைவு ரயில் இயக்கவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் எண் 02841 என்ற ரயில் ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 7, 14, 21 ஆகிய தேதிகளில் பிற்பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

அதே போல் சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் எண் 02842 என்ற ரயில் ஏப்ரல் 8, 15, 22 ஆகிய தேதிகளில் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 6.30 மணிக்கு ஹவுரா சென்று அடையும்.

இந்த சிறப்பு ரயிலில் 2-ஆம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகள் மட்டுமே இருக்கும் என்றும் இந்த ரயில் கரக்பூர், கட்டக், புவனேசுவரம், குர்தா சாலை, விசாகப்பட்டினம், விஜயவாடா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Booking starts today for Train Number – 02841, 02842 Howrah to Chennai Special AC train.