தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த ஐந்து 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நாளை (22.12.2022)வியாழக்கிழமை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெள்ளி மற்றும் சனிக்கிழமை (23.12.2022 & 24.12.2022): தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.