இலங்கை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வலுவிழக்கக்கூடும்.
இதன் காரணமாக, டிசம்பர் 27, 28 மற்றும் 29-ம் தேதிகளில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை பகுதிகளில் அதிகபட்சமாக 30 டிகிரி, குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு பா.செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.