வங்கிகளில் கடன் வாங்குவோர், குறிப்பிட்ட தேதிக்குள் தவணைத் தொகையை செலுத்த தவறினால் வங்கிகள் அபராதம் விதிக்கின்றன. சிலசமயம் இந்த அபராதம் மிக அதிகமாக விதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. அபராத வட்டியை வசூலிக்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது;

கடன்களுக்கான அபராதம் விதிப்பதில் நியாயமான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். கடன் வாங்கியவர் அதற்கான விதிமுறைகளை ஒப்பந்த நிபந்தனைகளை பின்பற்றாவிட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும் பட்சத்தில் அபராத கட்டணம் தான் வசூலிக்க வேண்டுமே தவிர அபராத வட்டி வசூலிக்கப்படக்கூடாது. ஏனெனில், அபராத வட்டி கடன் தொகை மீதான வட்டியாக கூடுதல் தொகையாக வசூலிக்கப்படுகிறது.

அபராத கட்டணமானது நியாயமானதாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட கடன்களுக்கான நிபந்தனைகளுக்கு ஏற்ப பாரபட்ச முறையில் விதிக்கப்பட வேண்டும். இதுபோல் விதிக்கப்படும் அபராதக் கட்டணம் மீது கூடுதலாக வட்டி வசூலிக்கப்படக்கூடாது.

அதே நேரத்தில், இந்த நிபந்தனைகள் கிரெடிட் கார்டுகள், வணிக ரீதியான கடன்கள் போன்றவற்றுக்குப் பொருந்தாது.

கடன் வட்டி அல்லது அபராதம் என்பது, கடன் வாங்கியவர் அதனை ஒழுங்காக திருப்பி செலுத்த வேண்டும் என்ற ஒழுக்கத்தை கடைபிடிப்பதற்காகத்தானே தவிர அதன் மூலமாக வங்கிகள் தங்கள் வருவாயை பெருக்குவதற்காக அல்ல. இந்தப் புதிய விதிமுறைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி நடைமுறைக்கு வருகின்றன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *