யுபிஐ எனப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 10 பில்லியன் மாதாந்திர பரிவர்த்தனைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
யுபிஐ எனப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 10 பில்லியன் மாதாந்திர பரிவர்த்தனைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மக்களிடையே கொண்டு சேர்க்க பல்வேறு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
அதில் குறிப்பாக யுபிஐ பேமெண்ட் முறை இந்தியாவில் பெரு நகரங்களையும் கடந்து பட்டி, தொட்டிகளில் உள்ள பெட்டி கடைகள் வரை எட்டியுள்ளது. கொரோனாவுக்கு பிறகு யுபிஐ பரிவர்த்தனை காய்கறி கடைகளில் இருந்து நகைக்கடை வரை இந்திய மக்களிடையே புழக்கத்தில் உள்ளது. இதன் விளைவாகவே ஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனை புத்தம் புது சாதனையை படைத்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் லாப நோக்கற்ற ஏஜென்சியான நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 10 பில்லியன் பரிவர்த்தனைகளைக் கடந்துள்ளதாக உறுதிபடுத்தியுள்ளது.