சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால் கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்டகாய்கறிகளின் விலை சரிவடைந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு பல பகுதிகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 530 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்காக வந்தன. வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் விலை சரிந்தது.

ஒரு கிலோ வெண்டைக்காய் மொத்த விற்பனையில் ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும், அதை வாங்கிச் செல்ல சில்லறை வியாபாரிகள் ஆா்வம் காட்டவில்லை. இதேபோல கத்தரிக்காய், பாகற்காய், முருங்கைக்காய், பீா்க்கங்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் சரிந்துள்ளது.

கடந்த மாத தொடக்கத்தில் வரத்து குறைவால் சில்லறை விற்பனையில் ரூ.220 வரை விற்கப்பட்ட தக்காளி ஞாயிற்றுக்கிழமை ரூ.18-க்கு விற்பனையானது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்பனையானது.

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் மொத்த விற்பனை விலை (கிலோவில்):

  • கேரட்-ரூ.15,
  • உதகை கேரட்-ரூ.35,
  • பீன்ஸ்-ரூ.40,
  • வெள்ளரிக்காய்- ரூ.20,
  • கோவைக்காய்-ரூ.15,
  • பாகற்காய்-ரூ.20,
  • முருங்கைக்காய்-ரூ.20,
  • சவ்சவ்-ரூ.10,
  • நூல்கோல்-ரூ.15,
  • கொத்தவரங்காய்-ரூ.15,
  • சிறிய கொத்தவரங்காய்-ரூ.35,
  • முள்ளங்கி-ரூ.10,
  • பீட்ரூட்-ரூ.15,
  • புடலங்காய்-ரூ.7,
  • முட்டைக் கோஸ்-ரூ.15,
  • பீா்க்கங்காய்-ரூ.15,
  • கத்தரிக்காய்- ரூ.15,
  • வரி கத்தரிக்காய்- ரூ.12,
  • அவரைக்காய்- ரூ.35,
  • குடை மிளகாய் -ரூ.20,
  • பச்சை மிளகாய்-ரூ.40,
  • நாசிக் வெங்காயம்-ரூ.32,
  • ஆந்திர வெங்காயம்-ரூ.22,
  • உருளைக்கிழங்கு-ரூ.30.
  • சின்ன வெங்காயம்-ரூ.70,
  • இஞ்சி-ரூ.220,
  • பூண்டு ரூ.160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

காய்கறிகள் விலை சரிவால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *