பிரபல ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் தற்போது இரண்டு ஹீரோயின்கள் நடிப்பது கோலிவுட்டில் ஒரு வழக்கமாக மாறி வருகிறது. இந்த வழக்கத்தின்படி விஜய் தற்போது நடித்து வரும் ‘புலி’ படத்தில் ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் அவருடைய அடுத்த படமான விஜய் 59 படத்திலும் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் என இரண்டு ஹீரோயின்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த படத்தை இயக்கவுள்ள அட்லி ஒரு முக்கிய கேரக்டருக்காக ராதிகாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளிவந்தது. இதை ராதிகாவும் டுவிட்டரில் உறுதி செய்தார்.
இந்நிலையில் ஒரு அபூர்வ ஒற்றுமையாக விஜய் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ள சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் ராதிகா ஆகிய மூவரும் தற்போது தனுஷ் நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி 2 படத்திலும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட்டில் விஜய், தனுஷ் ஆகிய இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பதும், விஜய்யின் தீவிர ரசிகர் தனுஷ் என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இருவர் படங்களிலும் மூன்று நடிகைகள் நடித்து வருவது தற்செயலாக அமைந்த ஒரு அபூர்வ ஒற்றுமை என கோலிவுட்டில் கூறப்பட்டு வருகிறது.
English Summary : Both Vijay-Dhanush films have the rare unity of Samantha, Amy Jackson and Radhika female roles in their next film.