அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வு வரும் 31ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த பணிக்காக மொத்தம் 8.96 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் நேற்று கடைசி நாள் என்று இருந்த நிலையில் நேற்று மட்டும் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த பணிக்காக விண்ணப்பித்தனர்.

கடைசி நாள் என்பதால் நேற்று போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் சேவை மையங்களில் ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனால் ஒவ்வொரு மையத்திலும் இரவு வரை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மொத்தம் 4,362 பணியிடங்கள் காலியாக உள்ளது. வரும் மே 31-ஆம் தேதி போட்டித் தேர்வு நடைபெற உள்ள நிலையில் இந்தத் தேர்வுக்கு கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சிறப்பு மையங்களில் இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வந்தன. ஆரம்பத்தில் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், கடைசி நேரத்தில் லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் வந்து குவிந்தது.

இந்தத் தேர்வுக்காக மொத்தம் 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடித்து வழங்கப்பட்டது. இந்த பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. போட்டித் தேர்வில் வெற்றி பெறுபவர்களில் இருந்து 1:5 என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் நேர்முகத் தேர்வு மொத்தம் 25 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட உள்ளதாகவும் அரசு தேர்வுத்துறை கூறியுள்ளது.

 

 

English Summary: 4362 lab assistant requirement apply in 8096 lakhs people