ravi-hansika-romeo-juliet-610x330
ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘நிமிர்ந்து நில்’ படத்திற்கு பின்னர் அவர் நடித்த திரைப்படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை என்ற வருத்தத்தில் இருக்கும் அவரது ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ‘ரோமியோ ஜூலியட்’ திரைப்படம் இம்மாதம் 22ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

ரோமியோ ஜூலியட் திரைப்படத்தை நேற்று பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘யூ’ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள படக்குழுவினர் படத்தை உடனடியாக ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘டண்டனக்கா’ என்ற பாடலுக்காக இயக்குனர் டி.ராஜேந்தர் வழக்கு தொடுத்திருப்பதை அடுத்து சர்ச்சைக்குரிய அந்த பாடலை படத்தில் இருந்து நீக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். எனவே டி.ராஜேந்தர் பிரச்சனை சுமூகமாக முடிவுக்கு வரும் என்று படக்குழுவினர் நம்புகின்றனர்.

ஜெயம் ரவி, ஹன்சிகா, வம்சி கிருஷ்ணா, பூஜம் பாஜ்வ, உமா பத்மநாபன், விடிவி கணேஷ் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜெயம் ரவியின் நெருங்கிய நண்பரும், பிரபல நடிகருமான ஆர்யா இந்த படத்தில் கெளரவ தோற்றத்தில் தோன்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டி.இமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை லட்சுமண் இயக்கியுள்ளார். எஸ்.நந்தகோபால் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

English Summary: Romeo Juliet Movie Release in May 22