புதுயுகம் தொலைக்காட்சியில் மனித வாழ்வை நிர்ணயம் செய்வது ஜோதிடமா? ஆன்மீகமா? எனும் புதுமையான தலைப்பில் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
மனித வாழ்வின் உயர்வும் தாழ்வும், இன்பமும் துன்பமும் ஆகிய அனைத்தும் கோள்களின் இயக்கத்தை வைத்துக் கூறும் ஜோதிடம் தான் தீர்மானிக்கிறது என்று ஒரு புறமும் …
மறுபுறம் ….நாள், கோள் எதுவானாலும் அவற்றைப் படைத்துக் காக்கும் இறைவனின் ஆணைக்கு உட்பட்டவையே. எனவே இறைவன் மீது கொள்ளும் உறுதியான நம்பிக்கையான ஆன்மீகமே மனித வாழ்வைத் தீர்மானிக்கிறது என பரபரப்பான விவாதங்கள், பல்வேறு சுவையான கருத்துக்களை வெளிப்படுத்தின.
இந்நிகழ்வில், ஆன்மீகமே எனும் தலைப்பில், திரு. ரா.சம்பத்குமார், திரு. பத்மன், திருமதி. பிரேமா, திரு. சிவ சதீஷ்குமார், புதுகை பாரதி ஆகிய ஆன்மீக சொற்பொழிவாளர்களும், ஜோதிடமே என்ற அணியில், திரு. மகேஷ் ஐயர், திரு. பஞ்சநாதன், திரு. விஜய் சேது நாராயணன் திரு.கணியர், மற்றும் திரு. விஜயன் ஆகிய ஜோதிடர்களும் வாதிட்டனர்.
இந்த விவாத நிகழ்ச்சில் மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக பிரபல எழுத்தாளர் திரு.இந்திரா சௌந்தராஜன் பங்கேற்று மனித வாழ்வில் நிர்ணயம் செய்வது எது? ஆன்மீகமா ,ஜோதிடமா என்பதற்கான ஒரு சுவாரஸ்யமான விளக்கத்தை கொடுத்து நிறை உரையாற்றினார்.
இந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சியை 7.9.24 சனிக்கிழமை அன்று காலை 11:00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.