தமிழகத்தின் மிகப்பழமையான கோவில்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலின் கும்பாபிஷேக பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோவிலின் பழமையை பாதுகாக்கும் வகையில் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இதற்கு முன்னர் கடந்த 2004ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பா பிஷேகம் நடத்த வேண்டும் என்ற விதிமுறைப்படி விரைவில் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

தற்போது ரூ.5 கோடி செலவில் கோவிலில் புணரமைப்பு பணிகள் நடந்து வருவதாகவும், பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பழமையை சிதைத்துவிடாமல் இயற்கையோடு இயைந்த பொருட்களைக் கொண்டு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இந்த கோவில் கடலுக்கு அருகே அமைந்துள்ளதால் உப்புக் காற்றின் பாதிப்பை தடுக்க கோயிலின் சுற்றுப்புற சுவர்களுக்கு ஆர்கானிக் மூலிகை எண்ணெய் மூலம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த எண்ணெய் வைரஸ் மற்றும் புஞ்சைகளை எதிர்க்கக்கூடியது என்றும், தமிழகத்தில் முதன்முதலாக இந்த முறை பின்பற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த கோவிலில் கதவுகளில் பித்தளை திருகுகள், சிசிடிவி கேமராக்கள், எல்.இ.டி விளக்குகள், சோலார் கூரை மற்றும் 7.5 டன் எடை கொண்ட ஏ.சி.யூனிட் ஆகியவை பொருத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

English Summary: Parthasarathy Temple restoration can be done with Natural Type.