தற்போதைய இளைய தலைமுறை இசையமைப்பாளர்கள் ஒருவர் இசையமைக்கும் படங்களில் இன்னொரு இசையமைப்பாளரை பாட வைக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அனிருத், இமான், யுவன்ஷங்கர் ராஜா, ஆகியோர் மற்ற இசையமைப்பாளர்களின் இசைக்கு பாடி வரும் நிலையில் தற்போது ஒரு படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் கம்போஸ் செய்த பாடல் ஒன்றை யுவன்ஷங்கர் ராஜா பாடியுள்ளார்

‘டார்லிங்’ வெற்றி படத்தை அடுத்து ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்து இசையமைத்து வரும் திரைப்படம் ‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’. இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை யுவன்ஷங்கர் ராஜா பாடியுள்ளார். சமீபத்தில் இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. ஜி.வி.பிரகாஷின் இசையமைப்பில் பாடியது தனக்கு புதுவித அனுபவத்தை கொடுத்ததாக யுவன்ஷங்கர் ராஜா கூறியுள்ளார்.

‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தில் ஜி.வி.பிரகாஷ், மனிஷா யாதவ், ‘கயல்’ ஆனந்தி, சிம்ரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தை கேமியோ பிலிம்ஸ் இந்தியா என்ற நிறுவனம் தயாரித்து வருகின்றது. இந்த படத்தில் பாடல்கள் வெளியீடு இன்னும் சில நாட்களில் நடைபெறும் என்றும் ஜூலையில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

English Summary: One Song sung by Yuvan for film Trisha illaina Nayanthara.