கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன்’ திரைப்படம் சமீபத்தில் ரிலீசாகி தமிழகத்தின் அனைத்து தியேட்டர்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தனது அடுத்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணியில் பிசியாக உள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது இன்னும் இரண்டு நாயகிகள் இந்த படத்தில் இணையவுள்ளனர். மனீஷா கொய்ராலா மற்றும் அனைகா ஷோடி ஆகியோர்கள்தான் இந்த படத்தில் புதியதாக இணையவுள்ள நாயகிகள் என படக்குழுவினர்கள் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

கமல்ஹாசனுடன் ஏற்கனவே இந்தியன், மும்பை எக்ஸ்பிரஸ், ஆளவந்தான் போன்ற படங்களில் நடித்துள்ள மனீஷா கொய்ராலா நான்காவது முறையாக அவருடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனைகா ஷோடி சமீபத்தில் வெளியான காவியத்தலைவன் படத்தில் சித்தார்த்துடன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு கமல்ஹாசன் தூங்காவனம்’ என்ற டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக அவர் இந்த படத்திற்கு ஒரே இரவு’ என்ற டைட்டில் வைத்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன. ஜிப்ரான் இசையமைக்கவுள்ள இந்த படத்தை ராஜேஷ் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார்.

English Summary: Kamalhasan going to be starred with three heroines in Thungavanam.