சென்னையில் மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்யாவின் மாஸ் மெட்ரோ நிறுவனம் திடீரென சுரங்கம் தோண்டும் பணியை நிறுத்திவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யாவுக்கு திரும்பிவிட்டது. இதனால், அந்த நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டுமான பொருட்களை வழங்கிய 72 சிறு, குறு நிறுவனங்கள் தங்களுக்கு வரவேண்டிய தொகையை மீட்டு தருமாறு மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் மனு அளித்தனர்.

இது குறித்து சென்னை வணிகர்கள் சங்கத்தின் தலைவர் மதியழகன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘மாஸ் மெட்ரோ நிறுவனத்தின் வைப்பு தொகையில் இருந்து எங்களுக்கு சேர வேண்டிய ரூ.29 கோடியை பெற்றுத்தருமாறு மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் மனு அளித்தோம். ஆனால் மெட்ரோ அதிகாரிகள், ‘உங்களுக்கு இவ்வளவு நிலுவை தொகை அளிக்க வேண்டியுள்ளது என அந்நிறுவனத்திடம் ஒரு கடிதமோ அல்லது நீதிமன்ற உத்தரவையோ பெற்று வந்தால் மட்டுமே பணம் தருவதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிர்வாகிகளை கண்டுபிடித்து தருமாறு காவல்துறையிடம் புகார் அளிக்கவுள்ளோம்” என்று கூறினார். ரஷ்யாவின் மாஸ் மெட்ரோ நிறுவனம் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு ரூ.29 கோடி வரை தரவேண்டியதுள்ளதாக கூறப்படுகிறது.

English Summary: Chennai Merchant Association files a complaint against Russia’s Mass Metro Company.