மத்திய அரசு துவங்கிய இன்சூரன்ஸ் திட்டத்தில் 8 கோடி குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த குடும்பங்கள் அணைத்து சமுக பாதுகாப்பு அடைந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “அரசு ஊழியர்கள் மட்டுமே ஓய்வூதியம் உள்ளிட்ட சமுக பாதுகாப்பில் இருந்து வந்தனர். இனி நாட்டின் சாதாரண குடிமகனுக்கும் சமூக பாதுகாப்பு கிடைக்க இந்த இன்சூரன்ஸ் திட்டம் வழிவகுக்கும். மேலும், தேசிய ஓய்வூதிய திட்டமான (என்.பி.எஸ்.,) மூலம், 60 வயது முதிர்வடைந்த மூத்த குடிமக்களும் பயன்பெற முடியும்,” என்றார்.
English Summary: Central Government Insurance Policy protected 8 Crore Families, says Central Finance Minister Arun Jaitley.