வரும் ஜுன் மாதம் 4ஆம் தேதி உலக புகையிலை மறுப்பு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல் மருத்துவமனையில் வாய்ப் புற்றுநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம் ஆரம்பமாகி உள்ளது. இந்த முகாமை ஸ்ரீ ராமச்சந்திரா பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வாய்நோய் அறிதல், கதிரியக்கத் துறைகள் இணைந்து நடத்துகின்றன.
இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை மூன்று தினங்களில் தினமும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த முகாம் நடைபெறும். வாயில் நாள்பட்ட புண், சாப்பிடும்போது எரிச்சல், சதை வளர்ச்சி மற்றும் வீக்கம், புகைப்பழக்கம், புகையிலை மெல்லும் பழக்கம் உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். முகாமில் அடிப்படை ரத்தப் பரிசோதனை, திசுப் பரிசோதனை, தாடை எலும்பு எக்ஸ்ரே உள்ளிட்டப் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும்.
English Summary : Free medical camp for mouth cancer starts today in Chennai till may 30th.