பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வரும் ஜன21.ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னதாகவே இதே கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டி கடந்த ஜன7. ஆம் தேதி போராட்டம் என்று அறிவித்திருந்தனர். ஆனால் அன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தமையால் வேலை நிறுத்தம் தள்ளிவாக்கப்பட்டது. தற்பொழுது நடந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்த காரணத்தால் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.