இளையதளபதி விஜய் நடித்துள்ள புலி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் இரவு பகலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷமீம் சமீபத்தில் இந்த படம் குறித்து ஒருசில விஷயங்களை தனது பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக மிக முக்கியமான கேரக்டரில் அதாவது மகாராணி கேரக்டரில் நடித்துள்ள ஸ்ரீதேவி, இந்த வயதிலும் படப்பிடிப்பிற்கு கொடுத்த ஒத்துழைப்பு தன்னை மட்டுமின்றி படக்குழுவினர் அனைவரையும் வியக்க வைத்ததாக கூறினார். மேலும், இந்த படத்தின் மகாராணி கேரக்டருக்காக சென்னையில் அடித்த கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாது சுமார் 15 கிலோ எடையுள்ள உடை மற்றும் நகைகளை அணிந்து பெரும் சிரமத்தை பொறுத்து கொண்டு நடித்ததாக கூறினார்.
மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸில் அவர் வாள்சண்டை உள்பட ஒருசில ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஸ்ரீதேவி கேட்டுக்கொண்டதற்கிணங்க பிரபல காஸ்ட்யூம் டிசைனர் மனீஷ் மல்ஹோத்ராவை பிரத்யேகமாக மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்டதாகவும் அதனால்தான் இயக்குனர் நினைத்ததை விட அவருடைய கெட்டப் மிகச் சிறப்பாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.
விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சுதீப், பிரபு, ஸ்ரீதேவி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சிம்புதேவன் இயக்கிய இந்த படத்திற்கு நட்டி நடராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary : Sridevi valcantai put on Vijay’s puli.