Honda-became-the-company's-பாலிவுட் நடிகைகள் அலியா பட், அனுஷ்கா சர்மா, தீபிகா படுகோனே ஆகியோர்கள் ஒருசில இருசக்கர வாகன உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் அம்பாசிடர்கள் பதவியில் இருந்து வரும் நிலையில் கோலிவுட் நடிகையான டாப்சியும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா நிறுவனத்தின் அம்பாசிடராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘வை ராஜா வை’ மற்றும் காஞ்சனா 2 ஆகிய படங்கள் பெற்ற வெற்றியால்தான் டாப்சிக்கு இந்த பதவி கிடைத்ததாக கூறப்படுகிறது. தனக்கு கிடைத்துள்ள பதவி குறித்து டாப்சி கூறியபோது, ‘ஹோண்டா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர் பதவி கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த அம்பாசிடர் பதவி தனக்கு கிடைக்கும் முன்பே, தான் ஹோண்டா நிறுவனங்களின் வாகனங்களைத்தான் பயன்படுத்தி வருவதாகவும் அவ்ர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். தன்னிடம் இருப்பது  ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா மற்றும் ஹோண்டா கார் என்று கூறிய டாப்சி, ஹோண்டாவை தன்னிடம் இருந்து பிரிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்

அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஒரு நிகழ்ச்சியில் ஹோண்டா நிறுவனம் இரண்டு புதிய மாடல் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்யவிருப்பதாகவும் அந்த நிகழ்ச்சியில் டாப்சி கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

டாப்சி தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ‘கான்’ என்ற தமிழ்ப்படத்திலும் இரண்டு இந்தி மற்றும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகின்றார்.

English Summary : Honda became the company’s brand ambassador Topsy