Deadline extension to 2005 to the currency converter
2005ஆம் ஆண்டுக்கு முன்னர் அச்சடிக்கப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடையும் என ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த காலக்கெடுவை மேலும் ஆறு மாதங்களுக்கு ஆர்.பி.ஐ. நீட்டித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக கள்ள நோட்டுகளின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கள்ள நோட்டுக்களின் புழக்கத்தை தடுக்கும் வகையில் கடந்த 2005 ஆம் ஆண்டிற்கு பின் உச்சகட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கரன்ஸிகள் அச்சடிக்கப்பட்டது.

எனவே 2005ஆம் ஆண்டிற்கு பின்னர் அச்சடிக்கப்பட்ட கரன்ஸிகளை மட்டும் புழக்கத்தில் விடும் நோக்கில் 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.100 மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை நாட்டின் பாதுகாப்பு கருதி இந்திய ரிசர்வ் வங்கி திரும்பப் பெற முடிவு செய்தது.

இதற்கான காலக்கெடு முதலில் 2015ஆம் ஆண்டு ஜனவரி 31 என்ற இருந்த நிலையில் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து ஜூன் 30 என்று அறிவித்திருந்தது. தற்போது பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து இந்த காலக்கெடு டிசம்பர் 31 வரை மேலும் ஆறு மாதங்கள் நீட்டித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

English Summary : Deadline extension to 2005 to the currency converter