Omanturar-state-'s-first-nuசென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் புதியதாக அணு ஆற்றல் பிரிவு செயல்படுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தமிழகத்திலேயே முதல்முறையாக ரூ.15 கோடி செலவில் அணு ஆற்றல் சிகிச்சைப் பிரிவு ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. இந்த சிகிச்சைப் பிரிவில் புற்றுநோய், இருதய நோய், சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்கள், தைராய்டு போன்ற முக்கிய நோய்களுக்கு நவீன முறையில் சிகிச்சை அளிக்க முடியும்.

அணு ஆற்றல் சிகிச்சைப் பிரிவின் கட்டுமானப் பணிகளுக்கு மத்திய அரசின் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் உரிமம் அளித்ததை தொடர்ந்து கட்டுமானப் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்புடன் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது கட்டுமானப் பணிகள் முற்றிலும் நிறைவடைந்துள்ளது. மேலும் ரூ. 5 கோடி செலவில் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை நேரடியாகக் கண்காணிக்கும் ஸ்கேன் கருவியும் இதே பிரிவில் நிறுவப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகளும், ஸ்கேன் கருவியை நிறுவும் பணியும் முடிவு பெற்றதை அடுத்து, இந்த பிரிவு செயல்படுவதற்கான உரிமத்தை வழங்குவதற்கு அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்துக்கு முறையாக மருத்துவமனை சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் அணுசக்தி ஒழுங்குமுறை வாரிய அதிகாரிகள் இந்த மருத்துவமனைக்கு நேரில் வந்து அணு ஆற்றல் பிரிவை ஆய்வு செய்தனர். ஆய்வுப் பணிகள் திருப்தி அளித்த நிலையில் சிகிச்சைப் பிரிவு செயல்படுவதற்கான அனுமதி தற்போது அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Omanturar state ‘s first nuclear power unit at the hospital . Allow Federal Government