Today, international alcohol, to commemorate the abolition of the special camp in ramachandra hospital chennaசென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் போதை மறுவாழ்வு முகாம் இன்று நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஜூன் 26ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மது, போதை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சர்வதேச மது, போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் மனநோய் மருத்துவத் துறையின் சார்பில் போதை மறுவாழ்வு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் போதை, குடிப் பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு இலவச பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு தேவையான மருந்துகள், ஆலோசனைகள் வழங்கப்படும். காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் மருத்துவமனையைச் சேர்ந்த பல்வேறு துறைகளின் நிபுணர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே போதைக்கு அடிமையானவர்கள் இந்த முகாமிற்கு வந்து புதுவாழ்வு பெற்று பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும், ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் போதைப் பொருள்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழியையும் இன்று ஏற்க உள்ளனர்.

English Summary : Today, international alcohol, to commemorate the abolition of the special camp