ரயில்வே துறையைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நவம்பர் 23ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடு உள்ளதாக தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியனின் (எஸ்.ஆர்.எம்.யு) பொதுச் செயலாளர் என்.கண்ணையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் நேற்று கூறிய அவர் “மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்ட பிபேக் தேப்ராய் குழு, அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே துறையைப் படிப்படியாக தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் பரிந்துரை செய்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜூன் 23 முதல் ஜூன் 30ஆம் தேதி வரை கருப்பு வாரமாக அறிவித்து ரயில்வே ஊழியர்கள் அனைவரும் அந்த நாளை அனுசரித்தோம்.
ரயில்வே ஊழியர்களின் உணர்வுகளை மீறி, மத்திய அரசு ரயில்வே துறையைத் தனியார் மயமாக்க முயற்சி செய்தால், நவம்பர் 23ஆம் தேதி முதல் ரயில்வே, அஞ்சல் துறை, பாதுகாப்புத் துறை, மத்திய அரசு அலுவலர்கள் என அனைத்து ஊழியர்களும் ஒருங்கிணைந்து கால வரையற்ற பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்’
இவ்வாறு என்.கண்ணையா தெரிவித்துள்ளார்.
English Summary:Indefinite strike . Railway Mazdoor Union Notice