nursedevelopmentcenterரூ. 200 கோடி செலவில் மத்திய செவிலியர் மேம்பாட்டு மையம் ஒன்று விரைவில் சென்னை அருகே உள்ள தாம்பரம் சானடோரியத்தில் அமைக்கப்பட உள்ளதாக மத்திய குடும்பநலத் துறைக்கான செவிலியர் ஆலோசகர் டாக்டர் ஆர்.ஜோசபின் லிட்டில் ப்ளவர் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் குரோம்பேட்டை ஸ்ரீ பாலாஜி செவிலியர் பயிற்சிக் கல்லூரி சார்பில் நடைபெற்ற சர்வதேசக் கருத்தரங்கு ஒன்றை தொடக்கி வைத்து பேசிய டாக்டர் ஜோசபின் லிட்டில் ப்ளவர் கூ|றியதாவது: “இந்தியாவில் தற்போது 8 ஆயிரத்து 200 செவிலியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இவை 2.95 லட்சம் செவிலியர்களை ஆண்டுதோறும் உருவாக்கி வருகின்றன. இந்தியா முழுவதும் அனைத்து செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளும் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களை கடைப்பிடித்து வருகின்றன. மருத்துவத் துறைக்குப் பெருமை சேர்க்கும் செவிலியர்களுக்கு இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் இந்திய செவிலியர்களை பிரிட்டன், அமெரிக்கா உள்பட பல வளர்ந்த நாடுகளும் விரும்பி அழைக்கின்ற்ன.

இந்தியாவில் தற்போதுள்ள 24 லட்சம் செவிலியர்களில் சிறப்புத் தகுதியும், திறனும் கொண்ட செவிலியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால், சர்வதேசத் தரம் கொண்ட பன்திறன் மருத்துவமனைகளில் பணி புரிவதற்கேற்ப செவிலியர்களின் செயல் திறன், ஆய்வுத் திறன் மேம்படுத்தப்பட வேண்டும். இந்தியாவில் இதர மாநிலங்களில் செயல்பட்டு வரும் செவிலியர் கவுன்சிலை ஒப்பிடும்போது, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் முதலிடத்தைப் பெற்று, இதர மாநிலங்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது. விரைவில் சென்னையில் ரூ.200 கோடி செலவில் சர்வதேச தரத்தில் செவிலியர்களை உருவாக்கும் மத்திய செவிலியர் மேம்பாட்டு மையம் ஆரம்பிக்கப்படும்’ என்று அவர் தெரிவித்தார்.

English Summary:As soon as the nurse in international standards development center in Chennai