fakeuniversitiesமேல்கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் போலி பல்கலைக்கழகங்களில் சேர்ந்து தங்கள் நேரம், படிப்பு, பணம் ஆகியவற்றை இழந்து அவதிப்படாமல் இருக்க யுஜிசி என்னும் பல்கலைக்கழக மானிய குழு 21 போலிப் பல்கலைக்கழகங்களின் பெயர்களை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த போலி பல்கலைக்கழகங்களை மாணவர்கள் அடையாளம் கண்டு, அவற்றில் சேர்ந்து படிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மாணவர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாக வெளியிடப்பட்டுள்ள இந்த 21 பல்கலைக்கழகங்களில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 8 போலி பல்கலைக்கழகங்களும், தலைநகர் டெல்லியில் 6 போலி பல்கலைக்கழகங்களும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பிஹார் ஆகிய மாநிலங்களில் தலா 1 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதால யுஜிசி பட்டியலிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு சட்டம், 1956-ன் படி மத்திய/மாநில/மாகாண சட்டம் அல்லது இந்தச் சட்டத்தின் பிரிவு 3-ன் படி பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டவையே முறையான பல்கலைக் கழகங்கள் ஆகும். எனவே விதிமுறைகளுக்கு ஏற்ப முறையான தகுதி இல்லாத கல்வி நிறுவனங்கள் தங்களை சட்டப்பிரிவு 23-ன் படி பல்கலைக் கழகம் என்று அழைத்துக் கொள்ளக் கூடாது.

யுஜிசி அறிவித்துள்ள 21 போலி பல்கலைக்கழகங்களின் பெயர்ப்பட்டியல் பின்வருமாறு:

1.Maithili University/Vishwavidyalaya, Darbhanga, Bihar.Delhi

2.Commercial University Ltd., Daryaganj, Delhi.

3.United Nations University, Delhi.

4.Vocational University, Delhi.

5.ADR-Centric Juridical University, ADR House, 8J, Gopala Tower, 25 Rajendra Place, New Delhi – 110 008.

6.Indian Institute of Science and Engineering, New Delhi. Karnataka

7.Badaganvi Sarkar World Open University Education Society, Gokak, Belgaum, Karnataka. Kerala

8.St. John’s University, Kishanattam, Kerala.Madhya Pradesh

9.Kesarwani Vidyapith, Jabalpur, Madhya Pradesh. Maharashtra

10.Raja Arabic University, Nagpur, Maharashtra.Tamil Nadu

11.D.D.B. Sanskrit University, Putur, Trichi, Tamil Nadu.West Bengal

12.Indian Institute of Alternative Medicine, Kolkatta.Uttar Pradesh

13.Varanaseya Sanskrit Vishwavidyalaya, Varanasi (UP) Jagatpuri, Delhi.

14.Mahila Gram Vidyapith/Vishwavidyalaya, (Women’s University) Prayag, Allahabad, Uttar Pradesh.

15.Gandhi Hindi Vidyapith, Prayag, Allahabad, Uttar Pradesh.

16.National University of Electro Complex Homeopathy, Kanpur, Uttar Pradesh.

17.Netaji Subhash Chandra Bose University (Open University), Achaltal, Aligarh, Uttar Pradesh.

18.Uttar Pradesh Vishwavidyalaya, Kosi Kalan, Mathura, Uttar Pradesh.

19.Maharana Pratap Shiksha Niketan Vishwavidyalaya, Pratapgarh, Uttar Pradesh.

20.Indraprastha Shiksha Parishad, Institutional Area,Khoda,Makanpur,Noida Phase-II, Uttar Pradesh.

21.Gurukul Vishwavidyala, Vridanvan, Uttar Pradesh.

English Summary:The list of 21 fake universities, including Tamil Nadu . UGC notification