ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டை குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் சென்னையில் இம்மாத குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில்
குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல், பொது விநியோக திட்டத்தில் குறைபாடுகள் ஆகியவை குறித்து அந்தந்த பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பொதுமக்கள் தங்க கருத்துக்களை கூறலாம்.

சென்னையில் 16 மண்டலப் பகுதிகளில் குறைதீர் கூட்டங்கள் நாளை நடைபெறுகின்றன. கூட்டங்கள் நடைபெறும் இடங்களின் விவரம்:

1. சிதம்பரனார் மண்டலம்—-சென்னை உயர்நிலைப்பள்ளி, புளியந்தோப்பு காவலர் குடியிருப்பு அருகில்.
2. ராயபுரம்—-சென்னை உயர்நிலைப்பள்ளி, பழைய வண்ணாரப்பேட்டை, (அண்ணா திருமண மாளிகை அருகில்).
3. பெரம்பூர்—-சென்னை உயர்நிலைப் பள்ளி, அகரம் (பெருமாள் கோயில் அருகில்)
4. அண்ணாநகர்—சென்னை மேல்நிலைப் பள்ளி, செனாய்நகர், (மாங்காளியம்மன் கோயில் அருகில்)
5. அம்பத்தூர்—-வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, துண்டலம், (போரூர் டோல்கேட் அருகில்)
6. வில்லிவாக்கம்—சென்னை மாநகராட்சி பள்ளி, வில்லிவாக்கம், (பேருந்து நிலையம் அருகில்).
7. திருவொற்றியூர்—-எம். ஆர். எப். தொழிலாளர் சங்கக் கட்டடம், பட்டினத்தார் கோயில் தெரு.
8. ஆவடி—-ஆதி திராவிடர் ஆரம்பப் பள்ளி, பங்காரம் பேட்டை கிராமம், மோரை ஊராட்சி (வீராபுரம் பேருந்துநிலையம் அருகில்).
9. தியாகராய நகர்—-ஒருங்கிணைப்பு குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையம், பிருந்தாவன் தெரு, மேற்கு மாம்பலம், (ஸ்ரீதேவிஜெயம் முத்துமாரியம்மன் திருக்கோயில் பின்புறம்).
10. மயிலாப்பூர்—-சென்னை மாநகராட்சி கட்டடம், எல்.பி.ரோடு, அடையாறு, (சென்னை மாநகராட்சி கட்டடம் பின்புறம்)
11. பரங்கிமலை—–நங்கநல்லூர், வ.உ.சி. தெரு, பழவந்தாங்கல் வியாபாரிகள் நலசங்க கட்டடம், (காமாட்சி திருமண மண்டபம்)
12. தாம்பரம்—-ஏரிக்கரை பிள்ளையார் கோயில் எதிரில், திருநீர்மலை பிரதான சாலை, லட்சுமிபுரம், குரோம்பேட்டை.
13. சைதாப்பேட்டை—சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, (மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில்)
14. ஆயிரம்விளக்கு——சென்னை நடுநிலைப் பள்ளி, தாணா தெரு,புரசைவாக்கம், (மார்க்கெட் அருகில்)
15. சேப்பாக்கம்—-சென்னை உயர்நிலைப் பள்ளி, மேற்குக் கூவம் ஆறு சாலை, சிந்தாதிரிப்பேட்டை (பேருந்து நிலையம் அருகில்)
16. சோழிங்கநல்லூர்—–செண்பகத்தம்மாள் திருமண மண்டபம், தெய்வசிகாமணி தெரு, பள்ளிக்கரணை. (சுராத்தமாள் கோயில்-குளம் அருகில்).

English Summary: Family Cards (Ration Cards) issues solving meeting places in Chennai.