18cp_Vikram_Prabhu__784407gகும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளக்கார துரை ஆகிய படங்களில் நடித்த நடிகர் விக்ரம் பிரபு, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘இது என்ன மாயம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் ரோமியோ ஜூலியட் படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் தயாரிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகனாக நடிக்க விக்ரம் பிரபு தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த புதிய படத்தை கணேஷ் விநாயக் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே அருள்நிதி, பூர்ணா நடித்த ‘தகராறு’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரோமியோ ஜுலியட்’ படம் போலவே இந்த படமும் ஜாலியான ஒரு காதல் கதையை கொண்ட திரைப்படம் என்றும், பொழுதுபோக்கு அம்சங்கள், காதல் மற்றும் காமெடி ஆகியவை இந்த படத்தில் இருக்கும் என்று தயாரிப்பாளர் நந்தகோபால் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

English Summary: RomeoJuliet producer vikramPrabhu for the nextflim