kamal
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ‘ரோமியோ ஜூலியட்’ திரைப்படம் தொடர்ந்து ஐந்தாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ஜெயம் ரவியின் அடுத்த படமான ‘அப்பாடக்கர்’ விரைவில் ரிலீஸாக அனனத்து ஏற்பாடுகளையும் படக்குழுவினர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் தமிழில் இல்லாததால் வரிவிலக்கு பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் படத்தின் டைட்டிலை மாற்ற படக்குழுவினர் முடிவு செய்தனர். பல டைட்டில்கள் பரிசீலனை செய்யப்பட்டு தற்போது இந்த படத்திற்கு ‘சகலகலாவல்லன்’ என்ற டைட்டிலை முடிவு செய்துள்ள படக்குழுவினர் புதிய டைட்டிலின் பெயரோடு போஸ்டரையும் இன்று காலை இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே கமல்,அம்பிகா நடிப்பில் இதே பெயரில் கடந்த 1982ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி,பிரபு, விவேக், சூரி, ‘நான்கடவுள்’ ராஜேந்திரன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ‘முனியாண்டி விலங்கியல் 3ஆம் ஆண்டு’ படத்தில் நடித்த நடிகை பூர்ணா, இந்த படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். எஸ்.தமன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு செந்தில்குமார் ஒளிப்பதிவு, செல்வா படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படம் அடுத்த மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary: Kamal Movie title will put jayam Ravi’s movie