அஜீத் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த ‘தல 56’ படத்தின் டைட்டில் ஒருவழியாக ‘வேதாளம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அஜீத் படத்தின் டைட்டில் மட்டுமின்றி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளிவந்துள்ளதால் அஜீத் ரசிகர்கள் இந்த சந்தோஷத்தை ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த டைட்டிலை ராகவா லாரன்ஸ், தான் நடிக்கவுள்ள வேறு படத்திற்கு பதிவு செய்து வைத்திருந்ததாகவும், அஜீத் படக்குழுவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் இந்த டைட்டிலை விட்டு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அஜீத்தின் இந்த படத்திற்கு வேதாளம்’ என்ற டைட்டில் ஏன் வைக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தில் அஜீத் மூன்றுவிதமான கெட்டப்புகளில் தோன்றவுள்ளதாகவும், இதில் ஒரு கெட்டப் வில்லன் டைப் கேரக்டர் என்றும், அந்த கேரக்டரின் பெயர் ‘வேதாளம்’ என்றும் கூறப்படுகிறது. இந்த நெகட்டிவ் கேரக்டர், ‘சந்திரமுகி’ வேட்டையன், ‘எந்திரன்’ வில்லன் ரஜினி போன்று ஈர்ப்பு மிகுந்த கேரக்டர் என்றும் இதன் காரணமாகவே அந்த கேரக்டரின் பெயரையே இந்த படத்தின் தலைப்பாக வைக்க அஜீத் மற்றும் இயக்குனர் சிவா இருவரும் இணைந்து முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் அஜீத்துக்கு “V” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் டைட்டில்களில் வெளிவந்த படங்களான வாலி, வில்லன், வரலாறு, வீரம் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால் அந்த வரிசையில் மற்றொரு “V” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் வெற்றிப்படமாக ‘வேதாளம்’ அமைய வேண்டும் என்பதால் இந்த டைட்டில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
English Summary : Director explains the reason behind Ajith Next film “Vethalam”.