இளையதளபதி விஜய் நடித்த புலி திரைப்படம் நாளை உலகம் முழுவதும் சுமார் 3000 திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இந்த படத்துக்கு தடை விதிக்கக் கோரி தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை வரும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ‘புலி’ படம் நாளை எவ்வித பிரச்சனையும் இன்றி ரிலீஸ் ஆகிறது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு ராஜசேகர் என்பவர் இயக்கிய ‘தாகபூமி’ என்ற தனது குறும்படத்த்தின் கதையை தழுவி, விஜய், சமந்தா நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘கத்தி’ என்ற பெயரில் படமாக எடுத்து வெளியிட்டதாகவும், இதற்காக முருகதாஸ், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், நடிகர் விஜய் ஆகியோர் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியும் தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 2014 டிசம்பர் 22-ல் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை பலகட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விஜய் நடித்த ‘புலி’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி, தஞ்சை நீதிமன்றத்தில் சமீபத்தில் அன்பு ராஜசேகர் மற்றொரு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். ‘புலி’ படத்தை தடை செய்வது எந்த அறிவிப்பும் வெளியிடாத நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
English Summary : Major announcement was made for “Puli” ban case.