அஜீத்தின் முந்தைய படங்களை விட அவர் நடித்த ‘பில்லா’, மற்றும் ‘ஆரம்பம்’ ஆகிய இரு படங்களிலும் அவர் ஸ்டைலிஷான காஸ்ட்யூமில் தோன்றியிருப்பார். இதற்கு முக்கிய காரணம் இந்திய அளவில் பிரபலமான காஸ்ட்யூம் டிசைனர் அனுவர்தன் என்பது அனைவரும் தெரிந்ததே. இந்நிலையில் பில்லா, ஆரம்பம் படங்களை அடுத்து மீண்டும் காஸ்ட்யூம் டிசைனர் அனுவர்தன், அஜீத்துடன் ‘வேதாளம்’ படத்தில் பணிபுரிந்துள்ளார்.

இந்த படத்தில் அஜீத் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் தோன்றுகிறார். குறிப்பாக ‘ரெட்’ படத்தில் வருவது போன்ற கெட்டப்பில் பிளாஷ்பேக் காட்சிகளில் தோன்றுகிறார். இந்த மூன்று வித்தியாசமான கேரக்டர்களுக்கும் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தை அஜீத் பெறுவதற்கு முக்கிய காரணமாக அனுவர்தன் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் காஸ்ட்யூம் பிரம்மாதமாக வந்துள்ளதற்கு அஜீத்தின் முழு ஒத்துழைப்பே காரணம் என்று கூறியுள்ள அனுவர்தன், மற்ற நடிகர்களுக்கு காஸ்ட்யூம் ஏன் பொருந்தும் என்பதை பலமணி நேரம் விளக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்றும், ஆனால் அஜீத் காஸ்ட்யூம் டிசைனரிடம் கேள்வி எதுவும் கேட்காமல் நான் சொல்லியபடி அப்படியே நடந்து கொள்வார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

English Summary : Costume designer Anu Vardhan joins Ajith after Billa and Aarambam.