இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 59’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் நடித்து வருகின்றனர். முதல் நாயகியான சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில், தற்போது மற்றொரு நாயகியான எமிஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் எமிஜாக்சன் நடிக்கும் கேரக்டர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. எமி ஜாக்சன் இந்த படத்தில் மலையாள பெண்ணாக நடிக்கின்றாராம். ஏற்கனவே எமிஜாக்சன் மலையாள பெண்ணாக கவுதம் மேனனின் ‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்தின் இந்தி ரீமேக் படமான ‘EK Deewana Tha’ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் முதல்முறையாக விஜய்யுடன் ஜோடி சேருவது குறித்து எமிஜாக்சன் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘விஜய்யுடன் நடித்த அனுபவங்களை தன்னால் மறக்க முடியாது என்றும் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் அவர் எளிமையாகவும், பழகுவதற்கு இனிமையாக இருந்ததையும் பார்த்து ஆச்சரியம் அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்

விஜய், சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். இந்த படம் ஜி.வி.பிக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தை ‘ராஜா ராணி’ இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார்.

English Summary: Vijay is very simple and Cool, Amy Jackson