hansika-61115பிரபல நடிகை ஹன்சிகா கடந்த வருடம் வெளியான ‘மான் கராத்தே’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ள நிலையில் மீண்டும் அவருடன் இணைவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் இம்முறை அவர் இணைவது படத்தில் நடிப்பதற்காக இல்லை என்றும், சித்தார்த் நடித்த படம் ஒன்றின் டீசரை சிவகார்த்திகேயனுடன் இணைந்து வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘எனக்குள் ஒருவன்’ படத்தை அடுத்து சித்தார்த் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள படம் ‘ஜில் ஜங் ஜக். இந்த படத்தின் போஸ்டரை ஏற்கனவே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட நிலையில் இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் சென்னையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை சிவகார்த்திகேயன் மற்றும் ஹன்சிகா இணைந்து வெளியிடவுள்ளனர்.

சித்தார்த், சனாந்த் ரெட்டி, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் தீரஜ் வைத்தி இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் இம்மாத இறுதியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் டிசம்பரில் வெளியாகும் என கூறப்படுகிறது.
English summary-sivakarthikeyan-Hansika join hands 2nd time