chennai-train-71115பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வருவது வழக்கமே. இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி ஏற்கனவே 12 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கியுள்ள நிலையில் பயணிகளின் அதிகமான கூட்டம் காரணமாக சென்னையில் இருந்து நெல்லைக்கு மேலும் ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ” தீபாவளி பண்டிகையொட்டி 7 மற்றும் 9 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து காலை 7 மணிக்கு நெல்லைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. 9 பெட்டிகளுடன் கூடிய இந்த முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் சீர்காழி, கடலூர், தஞ்சை திருச்சி வழியாக நெல்லைக்கு இயக்கப்படும். இந்த ரெயில் இரவு 11.15 மணிக்கு நெல்லை சென்றடையும்.

அதேபோல், நெல்லையில் இருந்து சென்னைக்கு 8, 11 ஆம் தேதிகளில் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நெல்லையில் காலை 9.20 மணிக்கு கிளம்பி இரவு 11.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்”

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ரயில்களை தீபாவளிக்கு சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் பயணிகள் பயன்படுத்தி கொள்ள அறுவுறுத்தப்படுகிறது.
English summary-special trains between Chennai Central-Tirunelveli