Smart-Card-191116
கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ஆலந்தூர் – கோயம்பேடு இடையிலான மெட்ரோ ரயில் சேவை சென்னை மக்களின் பெரும் ஆதரவை பெற்று வரும் நிலையில் தற்போது இந்த ரயில்களில் செல்வதற்கான புதிய சீசன் டிக்கெட் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆலந்தூர் – கோயம்பேடு இடையே 10 முறை சென்று வருவதற்கு ரூ.320 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பெறுவதற்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ.320 கட்டணமாக செலுத்தி “டிரிப் ஸ்மார்ட்’ என்ற அட்டையை பயணிகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய கட்டணம் அதிகமாக இருப்பதாக பயணிகள் கருத்து தெரிவித்ததை அடுத்து, பயணிகளின் கோரிக்கையை ஏற்றும், புதிய பயணிகளை ஊக்குவிக்கவும், பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மெட்ரோ ரயில் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முதல் கட்டமாக செப்டம்பர் மாதம் சுற்றுலாப் பயண அட்டையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஒட்டுமொத்த கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் கட்டணச் சலுகையைப் பெற முடியும். இது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் “டிரிப் ஸ்மார்ட் அட்டை’ என்ற திட்டத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அட்டை மூன்று விதமான பயணத் திட்டத்தைக் கொண்டதாகும். அதாவது 10 முறை, 40 முறை, 60 முறை மெட்ரோ ரயிலில் சென்று வருவதற்கான திட்டங்களைத் தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்தின்படி ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை 10 முறை சென்று வருவதற்கு ரூ.400 கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஆனால், 7 நாள்களுக்கு 10 முறை ஆலந்தூர் – கோயம்பேடு சென்று வருவதற்கு ரூ.320 மட்டுமே கட்டணமாக இந்த அட்டையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆலந்தூர் – கோயம்பேடு 40 முறை சென்று வர ரூ.1280, ஆலந்தூர் – கோயம்பேடு இடையே 60 முறை சென்று வர ரூ.1920 எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டை மூலம் மெட்ரோ ரயில் சாதாரண கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த “டிரிப் ஸ்மார்ட் அட்டையை’ பயணிகள் தாங்கள் செல்ல விரும்பும் 7 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு ஏற்றவாறு பெற்றுக் கொள்ளலாம்.

10 முறை சென்று வருவதற்கான “டிரிப் ஸ்மார்ட் அட்டை’ கட்டணம்
ஆலந்தூர் – ஈக்காட்டுத்தாங்கல் ரூ.80
ஆலந்தூர் – அசோக் நகர் ரூ.160
ஆலந்தூர் – வடபழனி ரூ.240
ஆலந்தூர் – அரும்பாக்கம் ரூ.320
ஆலந்தூர் – சிஎம்பிடி ரூ.320
ஆலந்தூர் – கோயம்பேடு ரூ.320

40 முறை சென்று வருவதற்கான கட்டணம்
ஆலந்தூர் – ஈக்காட்டுத்தாங்கல் ரூ.320
ஆலந்தூர் – அசோக் நகர் ரூ.640
ஆலந்தூர் – வடபழனி ரூ.980
ஆலந்தூர் – அரும்பாக்கம் ரூ.1,280
ஆலந்தூர் – சிஎம்பிடி ரூ.1,280
ஆலந்தூர் – கோயம்பேடு ரூ.1,280

60 முறை சென்று வருவதற்கான கட்டணம்
ஆலந்தூர் – ஈக்காட்டுத்தாங்கல் ரூ.480
ஆலந்தூர் – அசோக் நகர் ரூ.960
ஆலந்தூர் – வடபழனி ரூ.1,440
ஆலந்தூர் – அரும்பாக்கம் ரூ.1,920
ஆலந்தூர் – சிஎம்பிடி ரூ.1,920
ஆலந்தூர் – கோயம்பேடு ரூ.1,920
English summary-CMRL has introduced a new season ticket to travel between Alandur and Koyambedu.