உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த பாபநாசம், தூங்காவனம் ஆகிய இரண்டு ஹிட் படங்களில் சமீபத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே சீரியஸாக இருந்ததால் அடுத்ததாக ஒரு முழுநீள நகைச்சுவை படத்தில் நடிக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஐதராபாத் நகரில் ‘தூங்காவனம்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘சீக்கட்டி ராஜ்ஜியம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கமல் இந்த தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனுடன் பேசும்படம், வெற்றி விழா,போன்ற படங்களில் நடித்தவரும் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனனின் மனைவியுமான அமலா இந்த படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆகிறார். மேலும் இந்த படத்தில், ஷரீனா வகாப் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார். இந்த படத்தின் இன்னொரு கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் தயாராகவுள்ளது.
நியூயார்க், மற்றும் ஜார்ஜியாவில் வரும் ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்பு நடைபெறும் என்றும், அதற்கு முன்னர் பயிற்சி எடுத்து கொண்டு மொத்தம் 50 நாட்களில் இந்த படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு கமல்ஹாசனேஎ திரைக்கதை எழுதுகிறார். இந்த படத்தில் நகைச்சுவை மட்டுமின்றி சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கிய மெசேஜும் இருக்கும் என கூறப்படுகிறது.English suammry-Kamal’s next film in Jan 2016