சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் இன்று முதல் ரெயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 3-வது பிளாட்பாரத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் இன்று அதாவது திங்கட்கிழமை மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு ரெயில் புறப்படும் இடம் (பிளாட்பாரம்) மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று மங்களூர் செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ், பெங்களூர் செல்லும் சிட்டி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ், புதுடெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் மற்றும் அலப்பீ எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் 5-வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும்.
மேலும், பெங்களூரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு இயக்கப்படும் லால்பாக் எக்ஸ்பிரஸ், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் 5-வது பிளாட்பாரத்திற்கு வந்து சேரும். கோவையில் இருந்து வரும் கோவை எக்ஸ்பிரஸ் 6-வது பிளாட்பாரத்திற்கு வரும். சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டைக்கு இயக்கப்படும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் 11-வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும்.
இதேபோல் வருகிற செவ்வாய்க்கிழமை ஈரோட்டில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வரும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் 5-வது பிளாட்பாரத்திற்கு வரும்.
மேலும், சென்னை சென்டிரலில் இருந்து நாளை, 6, 7 மற்றும் 11-ந்தேதிகளில் விஜயவாடாவுக்கு இயக்கப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் ‘என்ஜினீயரிங்’ பராமரிப்பு பணி காரணமாக 40 நிமிடம் தாமதமாக புறப்பட்டு செல்லும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary:Chennai Central railway station platform area maintenance work. Trains depart the location change.