construction award4116ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் கட்டுமானத் தொழிலில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு “கட்டுமானத் தொழில்’ என்ற பத்திரிகை விருது வழங்கி வரும் வருகிறாது. இந்நிலையில் இவ்வருடத்திற்கான கட்டுமானத் துறை விருதுக்கு விண்ணப்பிக்க வரும் 10-ஆம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

“கட்டுமானத் தொழில்’ பத்திரிகை வழங்கவுள்ள இந்த விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி மாலை 6 மணிக்கு மியூசிக் அகாதெமியில் நடைபெறுகிறது. இந்த விழாவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த கட்டுமானத் துறை நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானத் தொழிலில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் தங்களது விவரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து, வரும் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதற்கான நகலை தபால் மூலமும் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய விவரங்களுக்கு kattumanathozil@yahoo.co.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளுமாறு கட்டுமானத் தொழில் பத்திரிகை அறிவித்துள்ளது.

English Summary: Last date to apply for the award for the construction sector.