சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி பொறுப்பெற்ற இரா. தாண்டவன் இம்மாதம் 17ஆம் தேதி பணி நிறைவு பெறுவதால் அவருக்கு பதிலாக புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தெரிவிக் குழு அமைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தெரிவிக்குழுவில் ஓய்வு பெற்ற லஞ்ச ஒழிப்பு மேம்பாட்டு ஆணையர் பி.என். வேதநாராயணன் ஒருங்கிணைப்பாளராகவும், எஸ்.ஆர்.எம். பல்கலை. அறிவியல், மானுடவியல் துறை இயக்குநர் ஆர்.பாலசுப்பிரமணியன், சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவின் முன்னாள் உறுப்பினர் ஆர்.சுரேந்திர பிரசாத் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தெரிவிக் குழு பரிந்துரை செய்யும் மூன்று நபர்களில் ஒருவரை பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ரோசய்யா விரைவில் நியமனம் செய்வார் என்று கூறப்படுகிறது.
English Summary: Madras University Vice-Chancellors to choose new Raised Panel notice.