trainபொங்கல் திருநாளை முன்னிட்டு ரெயில்களில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் ஏற்கனவே ஒருசில சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ள நிலையில் தற்போது புதுச்சேரியில் இருந்து கோவைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 06167 என்ற எண்ணுடைய இந்த சிறப்பு ரெயில் புதுச்சேரியில் இருந்து வரும் 16ஆம் தேதி மதியம் 12.30 மணிக்குப் புறப்பட்டு இரவு 9 மணிக்கு கோவை சென்றடையும்.

இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து 22ஆம் தேதி எர்ணாகுளத்திற்கு 00638 என்ற எண்ணுடைய சுவிதா சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரெயில்  இயக்கப்படுகிறது. இந்த ரெயில் காட்பாடி, ஈரோடு, கோவை, பாலக்காடு, திரிச்சூர் வழியாக செல்லும். மறுமார்க்கமாக எர்ணாகுளத்தில் இருந்து 24ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு  06172 என்ற எண்ணுடைய சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

மேலும் கோவையில் இருந்து வரும் 17ஆம் தேதி சென்னை எழும்பூருக்கும் 06168 என்ற எண்ணுடைய சிறப்பு ரயிலும், கொச்சுவேலியில் இருந்து 16ஆம் தேதி மங்களூருக்கு 06171 என்ற எண்ணுடைய சிறப்பு ரெயிலும் இயக்கப்படுகின்றன.

இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குவதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

 

English Summary:  Special Train on account of Pongal Holidays.