post-dept-12112015சென்னை சேத்துப்பட்டு அஞ்சல் அலுவலகம் நேற்று முன் தினம் அதாவது ஜனவரி 9ஆம் தேதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் இதுவரை செயல்பட்டு வந்த அஞ்சலகம் “11/5, செல்வநாதன் தெரு, சேத்துப்பட்டு, சென்னை-31′ என்ற முகவரிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது என்று சென்னை நகர தலைமை தபால் அதிகாரி மெர்வின் அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.

இந்த அலுவலகம் இதுவரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்தது என்றும், நவீன வசதிகளுடன் மேலே குறிப்பிட்ட புதிய இடத்தில் சனிக்கிழமை முதல் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

English Summary: Chennai Chetpet Post Office Relocation.